ஈரோட்டில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்ந 35 க்கும் மேற்பட்ட சாயபட்டறைகளுக்கு சீல் வைத்தது மாவட்ட நிர்வாகம்
ஈரோடு மாவட்டம் வெண்டிப்பாளையம் பகுதியில், காலிங்கராயன் வாய்க்காலில் கழிவு நீரைக் கலந்த 35க்கும் மேற்பட்ட சாய ஆலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.
பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உயிர் கொடுத்து வரும் காலிங்கராயன் வாய்க்காலில், சாய ஆலைகள் இரவு நேரங்களில், சுத்திகரிக்கப்படாமல், சாயக்கழிவுகளை கலந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
நள்ளிரவில் அங்கு அதிமுக எம்.எல்.ஏ சிவசுப்பிரமணி, வருவாய்த்துறையினருடன் ஆய்வு மேற்கொண்டார். அதில் சில ஆலைகள் காலிங்கராயன் வாய்க்கால் வரை நேரடியாக குழாய் புதைத்து, சாயக்கழிவுகளை கலந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அக்குழாய்களை அகற்றிய அதிகாரிகள், சட்டவிரோதமாக செயல்பட்ட 35க்கும் மேற்பட்ட சாய ஆலைகளுக்கு சீல் வைத்தனர்,.
Comments