சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை : தமிழ்நாடு காவல்துறை

0 5341

ட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் நோக்கங்களுக்காக, பிற அமைப்பினரைப் போல், தங்களைப் பாவித்துக் கொண்டு, பெருந்திரளாகக் கூட திட்டமிடுவதாக, தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது,

என காவல்துறை கூறியுள்ளது. சட்டத்தை கையிலெடுத்து, போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட, திட்டமிட்டு வருவதாகவும், தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.  சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது  கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments