குடிபெயரும் போது, வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்வதற்கு, நாகாலாந்தில் ஒரு வீட்டையே அலேக்காக தூக்கி செல்லும் காட்சி
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும் போது, வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்வதை தான் பார்த்திருப்போம். ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், ஒரு வீட்டையே ''அலேக்காக'' தூக்கிக்கொண்டு இடம்பெயர்ந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள லாங்லெங் மாவட்டத்தில் உள்ள யாச்செம் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டை, அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அலேக்காக தூக்கிக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு இடம் மாற்றினர். இது குறித்த வீடியோ காட்சியை வனத்துறை அதிகாரியான சுதா ராமன் என்பவர் ட்விட்டரில் வெள்ளியன்று பகிர்ந்ததை அடுத்து, அது ஏராளமான நெட்டிசன்களால் பகிரப்பட்டது.
In unity is strength, and economy.
Shifting a house to a new location at Yachem village in #Longleng district of #Nagaland.#Nagahills#northeast #IndiaTogether pic.twitter.com/5GSYFlj55p
Comments