13 வயது சிறுவன் தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக 14 வயது சிறுமி போலீசில் புகார் : இன்ஸ்டாகிராம் பழக்கம், வீடியோகால் விபரீதம்

0 13500

மும்பையில் தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 13 வயது சிறுவன் மீது 14 வயது சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். ஊரடங்கு சமயத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, வீடியோ கால் விளையாட்டில் வெற்றி பெற்றதற்காக சிறுமியின் ஆடையை நீக்க கூறி, அதை தனது செல்போனில் சிறுமிக்கு தெரியாமல் பதிவு செய்த சிறுவன், சிறுமியிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் அவனை பிளாக் செய்ததையடுத்து, சிறுமியின் தோழிக்கு அந்த ஆபாச வீடியோவை சிறுவன் அனுப்பிய நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில், சிறுமி வசிக்கும் அதே பகுதியில் சிறுவன் வசித்து வருவதும், இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருவதும்  தெரியவந்துள்ளது. போலீசார் விவரத்தை கூறியபோது சிறுவனின் பெற்றோர் அதிர்ந்து போயுள்ளனர். சிறுவன் மீது உரிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments