விண்ணில் ராட்சத பலூன் மூலம் ஏவப்பட்ட 100 மிகச் சிறிய செயற்கைகோள்கள்
சாதனை முயற்சியாக நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைகோள்கள் ராமேஸ்வரதத்தில் இருந்து ராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.
இதனை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
ராமேஸ்வரத்திலுள்ள ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் இணைந்து மாணவர்களுக்கு செயற்கை கோள்களை உருவாக்கும் பயிற்சி அளித்தனர்.
இதில், ஆயிரத்து 200 மாணவர்கள் 12 முதல் 60 கிராம் எடை கொண்ட 100 சிறிய ரக செயற்கை கோள்களை உருவாக்கினர்.
Comments