விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்
பிரதமர் மோடி தலையிட்டால், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார்.
வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீது தமக்கு எந்த மரியாதை குறைவும் இல்லை என இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள சரத் பவார், அதே நேரம் மோடி போன்ற மூத்த தலைவர்கள் தலையிட்டால் உடனடி பலன் கிடைக்கும் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், தங்களது பிரச்சனை தீர வேறு வழிகள் உள்ளனவா என சிந்திக்குமாறும் சரத் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments