ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்த பணம் விநியோகித்த வழக்கு; லஷ்கர் தீவிரவாதி ஹபீஸ் செய்யது உள்ளிட்டோர் மீது பிடிவாரண்ட்

0 1250
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தான் என அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பாகிஸ்தானில் உள்ள லஷ்கரே தொய்பா தீவிரவாதி ஹபீஸ் செய்யது மீது டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

அவனுடன் சேர்த்து காஷ்மீரில் வியாபாரம் செய்யும் சாகூர் அகமது, பிரிவினைவாதி அல்தாப் அகமது, ஏற்கனவே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுஏஇ வியாபாரி நவல் கிஷோர் கபூர் ஆகியோர் மீதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த இவர்கள் பணம் பட்டுவாடா செய்தனர் என்ற அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்று நீதிபதி பிடிவாரண்டுகளை பிறப்பித்துள்ளார்.

உள்ளூர் நெட்வொர்க் மூலம் இவர்கள் ஹவாலா பணத்தை தீவிரவாதிகளுக்கு விநியோகித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments