டிரம்பின் பொய் பிரச்சாரங்களால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் ரூ.380 கோடி வீண்; வாஷிங்டன் போஸ்ட் தகவல்
நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தல் குறித்த டிரம்பின் பொய்யான பரப்புரைகளால், அமெரிக்க மக்களின் வரிப்பணம் சுமார் 380 கோடி ரூபாய் வீணாகி விட்டதாக, அரசு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறிய பொய்யான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, அரசு அமைப்புகள் தினமும் செலவழித்த தொகைகளை பட்டியலிட்டதில் இது தெரிய வந்துள்ளது.
எந்த பலனும் இல்லாத சட்டவழக்குகளை தொடரவும், தேர்தல் அலுவலர்களுக்கு அச்சறுத்தல் உள்ளது என்ற டிரம்பின் போலியான குற்றச்சாட்டுகளால் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவும் இந்த தொகை செலவழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போன்று அமெரிக்க நாடாளுமன்றத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்கியதால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கவும், தேசிய பாதுகாப்பு படையினரை கூடுதலாக நியமிக்கவும் இந்த நிதி தேவைப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments