சென்னையில் தடையை மீறி வரவேற்புப் பதாகைகள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர்
சென்னையில் தடையை மீறி வரவேற்புப் பதாகைகளை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் குறித்த விழிப்புணர்வுப் பேரணியில் தன்னார்வலர்களுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்றார்.
அதன்பின் பேசிய அவரிடம் சசிகலாவுக்கு வரவேற்புப் பதாகைகள் வைக்க அனுமதி கோரப்பட்டதா எனச் செய்தியாளர்கள் வினவினர்.
அதற்குப் பதிலளித்த அவர், யாராக இருந்தாலும் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை என்றும், மீறி வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Comments