அதிமுக தலைமையகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது
அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
போலீசார் 4 இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், போக்குவரத்தும் தடையின்றி அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலையை இணைக்கக் கூடிய டி.டி.கே சாலையிலும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக 40க்கும் மேற்பட்ட பேரிகாடுகள் அதிமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பழைய சிசிடிவி கேமராக்கள் மாற்றப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டன.
Comments