வாட்ஸ்ஆப்பின் நடவடிக்கையால் டெலிகிராமுக்கு மாறும் வாடிக்கையாளர்கள்..! கடந்த மாதம் மட்டும் 6.3 கோடி பேர் பதிவிறக்கம்
கடந்த மாதம், உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட நம்பர் ஒன் செயலியாக டெலிகிராம் மாறி உள்ளது.
வாட்ஸ்ஆப்பின் தனிநபர் ரகசிய காப்புரிமை கொள்கை மாற்றத்தால் அதிருப்தி அடைந்த லட்சக்கணக்கான அதன் வாடிக்கையாளர்கள் டெலிகிராமுக்கு மாறி வருகின்றனர்.
இதனால் கடந்த மாதம் உலக அளவில் 6 கோடியே 30 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக செயலிகளின் பதிவிறக்கத்தை கண்காணிக்கும் சென்சர் டவர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் அதிகபட்சமாக இந்தியாவில் 24 சதவிகிதமும், இந்தோனேசியாவில் 10 சதவிகிதமும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கிடுகிடு பதிவிறக்கத்தால், ஆப் ஸ்டோரின் முதல் டாப் 10 பதிவிறக்க செயலிகளில், டெலிகிராம் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
Comments