ஈக்வடார் நாட்டில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று அதிபர் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்
ஈக்வடார் நாட்டில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அதிபர் மற்றும் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய தேர்தல் கவுன்சில் அதிகாரிகள் தேர்தல் பொருட்களை அனுப்பும் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
இந்த தேர்தலில் வெற்றி பெறும் அதிபர் வருகிற மே மாதம் பதவி ஏற்பார்.
மேலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் உள்பட பல்வேறு பிரச்னைகளை புதிய அதிபர் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments