பிரபல காமெடி நடிகர் முன்னாவர் பரூக்கி சிறையில் இருந்து விடுதலை

0 2556
பிரபல காமெடி நடிகர் முன்னாவர் பரூக்கி சிறையில் இருந்து விடுதலை

கைச்சுவை நடிகரான முன்னாவர் பரூக்கி நேற்றிரவு இந்தூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையிலும் சிறை அதிகாரிகள் உத்தரவின் நகல் கிடைக்கவில்லை என்று அவரை விடுதலை செய்ய மறுத்து இழுத்தடித்தனர். பின்னர் இரவில் அவர் விடுவிக்கப்பட்டார்.

மத விரோதத்தை தூண்டும் கருத்துகளைப் பேசியதற்காக ஜனவரி முதல் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அவர் ஜாமீனை நிராகரித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பரூக்கி மேல் முறையீடு செய்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments