புறஊதாக் கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்க திராட்சைப்பழம்..! ஆய்வில் தகவல்
திராட்சைப் பழங்களை உட்கொண்டால் சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதாக் கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அலபாமா பல்கலைக்கழகத்தில் உள்ள American Academy of Dermatology என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், திராட்சைப்பழங்களில் காணப்படும் பாலிபினால்கள், தோல் மற்றும் தசைகளைப் பாதுகாக்கும் என தெரியவந்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 2 கோப்பை திராட்சை ஜூஸ் சாப்பிடுவதால் புறஊதாக் கதிர்கள் மூலம் தோல் பாதிக்கப்படுவது வெகுவாகக் குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. திராட்சையால் தோல்களில் உள்ள செல்கள் இறப்பு குறைவதும் தெரியவந்துள்ளது.
Comments