அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டுக்கான H-1B விசா பதிவு அடுத்த மாதம் தொடக்கம்

0 1105
அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டுக்கான H-1B விசா பதிவு அடுத்த மாதம் தொடக்கம்

மெரிக்காவில் 2022 ஆம் ஆண்டுக்கான H-1B விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் 9 ஆம் தேதி தொடங்கும் என அமெரிக்க குடியேற்றத் துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது. H-1B விசா குலுக்கல் முறையில் வழங்கப்படும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

எச் -1 பி விசா விண்ணப்பத்திற்கானப் பதிவுகள் வரும் மார்ச் 9 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 31க்குள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments