சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசிக்கு சீன அரசு ஒப்புதல்
சினோவாக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பொது மக்கள் பயன்படுத்த சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
சினோவாக் பயோடெக்குடன் இணைந்து சினோவாக் லைஃப் சயின்சஸ் நிறுவனம் தயாரித்த கொரோனாவேக் என்ற தடுப்பூசி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனாவில் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தோனேசியா, துருக்கி, பிரேசில், சிலி, கொலம்பியா, உருகுவே உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியை உள்நாட்டில் அவசரகாலத்திற்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்தது. சீனாவில் தயாரிக்கப்பட்ட 2வது கொரோனா தடுப்பூசியான சினோவாக், 14 முதல் 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments