மாஸ்டரில் சிரஞ்சீவியை கவர்ந்த பவானி..! தெலுங்கிலும் விஜய் சேதுபதி கொடி

0 51429
மாஸ்டரில் சிரஞ்சீவியை கவர்ந்த பவானி..! தெலுங்கிலும் விஜய் சேதுபதி கொடி

மாஸ்டர் படத்தில் நாயகனை விட வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் நடிப்பு தன்னை கவர்ந்ததாக தெலுங்கு பட அறிமுக விழாவில் நடிகர் சிரஞ்சீவி பாராட்டி பேசினார். விழாவில் ஆங்கிலம் கலந்த தெலுங்கில் பேசி ரசிகர்களை கவர்ந்தார் விஜய்சேதுபதி...

நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள உப்பனா என்ற தெலுங்கு படத்தின் அறிமுக விழாவில் பேசிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, விஜய் சேதுபதியை வானளாவ புகழ்ந்தார். தமிழ் திரை உலகில் தன்னடக்கத்துடன் மனிதனேயமுள்ள மனிதராக விளங்கும் விஜய் சேதுபதி, கதாநாயகனாக நடிப்பதை விட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் இந்திய அளவில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.

அண்மையில் தான் பார்த்த மாஸ்டர் படத்தில் நாயகனை விட வில்லனாக பவானி கதாபத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி தன்னை வெகுவாக கவர்ந்ததாக சிரஞ்சீவி தெரிவித்தார்.

விஜய் சேதுபதிக்கு ஜார்ஜியா போன்ற வெளி நாடுகளிலும் ரசிகர்கள் இருப்பதாக பாராட்டிய சிரஞ்சீவி, உப்பன்னா படத்தில் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ததுமே படம் வெற்றி பெற்று விட்டதாக நம்பிக்கை தெரிவித்தார்.

விழாவில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் விஜய் சேதுபதி

தமிழ் திரை உலகில் பன்முக கலைஞராக வலம் வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் ஏற்கனவே சிரஞ்சீவியுடன் சாய்ரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் துணை நடிகராக இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments