இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 2,360 அரசியல் கட்சிகளில் 2,301 கட்சிகள் அங்கீகரிக்கப்படாதவை எனத் தகவல்

0 2501

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த 2,360 அரசியல் கட்சிகளில், சுமார் 98 விழுக்காடு அளவிற்கான கட்சிகள், அங்கீகரிக்கப்படாதவை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் தகவல்களை பெற்று ஆய்வு மேற்கொண்ட ஜனநாயக சீர்திருத்த அமைப்பான,ec தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நிலவரப்படி 1112 கட்சிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில், அதன் எண்ணிக்கை, 2 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது வரையில், பதிவு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரத்து 360 கட்சிகளில், 2 ஆயிரத்து 301 கட்சிகள் அங்கீகரிக்கப்படாதவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments