"இவன் வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றான் டா", போட்டோகிராபர் மேல் காண்டான மாப்பிள்ளை

0 7302

கல்யாண வீடு என்றாலே ஆடல், பாடல் சிரிப்பிற்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், மணமேடையில், மணப்பெண்ணை மட்டும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த போட்டோகிராபரை மாப்பிள்ளை அடித்த நகைச்சுவையான சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மணமேடையில், மாப்பிள்ளையை சற்று தள்ளி நிற்குமாறு கூறிய, போட்டோகிராபர், மணப்பெண்ணை சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்தார். இதனை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மாப்பிள்ளை சிறுது நேரத்தில் டென்ஷன் ஆனார். இதை தொடர்ந்து, போட்டோகிராபரின் மண்டையில் ஒரு அடிக்கொடுத்த மாப்பிளையை கண்டு, மணப்பெண் குலுங்கி குலுங்கி சிரித்தார்.

சிரிப்பை அடக்கமுடியாமல், மணப்பெண் தரையில் அமர்ந்து சிரித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து, பரபரப்பான சூழ்நிலையை கூல் ஆக கையாண்ட மணப்பெண்ணுக்கு, நெட்டிசன்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளித்தெளித்து வருகின்றனர்.

I just love this Bride ?????? pic.twitter.com/UE1qRbx4tv

— Renuka Mohan (@Ease2Ease) February 5, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments