முதல் முறையாக நக்சல் தடுப்பு பிரிவான கோப்ரா படையில் இணையும் 34 பெண்கள்!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நக்சலைட்டுகள் ஒழிப்பு பிரிவில் முதல் முறையாக மகளிர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்த படையில் 6 பிரிவுகளைச் சேர்ந்த 34 மகளிர் கோப்ரா படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதன் பின்னர் மகளிரும், ஆடவர் கமாண்டோக்களை போல நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குநர் ஜெனரல் ஏ.பி.மகேஷ்வரி கூறியுள்ளார்.
இதே போன்று முதல் முறையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மகளிர் பாண்டு வாத்தியக்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 88 வது பட்டாலியனை முழுக்க, முழுக்க மகளிர் மட்டுமே இடம் பெற்றுள்ள படையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை மாற்றி உள்ளதாகவும், உலகிலேயே ரிசர்வ் போலீஸ் படையில் இது போன்ற நடவடிக்கை முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
Comments