இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் குவிப்பு

0 2411

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை சேப்பாகம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசினார். 218 ரன்கள் எடுத்திருந்த அவர் சபாஷ் நதீம் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பும்ரா, அஸ்வின், சபாஷ் நதீம், இஷாந்த சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments