விவசாய சங்கங்களுடன் நிபுணர் குழு ஆலோசனை

0 1346
விவசாய சங்கங்களுடன் நிபுணர் குழு ஆலோசனை

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் உச்சநீதிமன்றம் நியமித்த 3 பேர் கொண்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி உத்தரவிட்டது.

மேலும் வேளாண் சட்டங்கள் குறித்து அறிக்கை அளிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இக்குழு நேற்று மாநில விற்பனை வாரியங்களின் தலைவர்கள், உணவு பூங்கா நிர்வாகிகள் உள்ளிடோரிடம் ஆலோசனை நடத்தியது.

இதில், குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments