எச்1பி விசா வழங்குவதில் குலுக்கல் முறை: இந்த ஆண்டு இறுதி வரை தொடரும் என பைடன் நிர்வாகம் அறிவிப்பு
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிவரை ‘எச்1பி' விசா வழங்குவதில் குலுக்கல் முறையே தொடரும் என அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1பி’ விசா வழங்கி வருகிறது. ஆண்டுக்கு, 85 ஆயிரம் எச்1பி விசா வழங்கப்படுகிறது.
இதற்கு, 2லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் எச்1பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Comments