புதிய கொரோனா பரவலை எதிர்கொள்ளும் சக்தி கொண்டது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: மருத்துவ ஆய்வாளர்களின் தரவுகளில் தகவல்

0 1437
புதிய கொரோனா பரவலை எதிர்கொள்ளும் சக்தி கொண்டது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: மருத்துவ ஆய்வாளர்களின் தரவுகளில் தகவல்

பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரசை எதிர்கொள்ளும் சக்தி ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய கொரோனா தொற்றுக்கு எதிராக 74 புள்ளி 6 சதவீத செயல் திறனும், சாதாரண தொற்றுக்கு எதிராக 84 புள்ளி 1 சதவீத செயல்திறனும் ஆக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசிக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதேநேரம் தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் புதிய கொரோனா பரவலுக்கு எதிராக ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி முழுவீச்சில் செயல்படுமா என்று தெளிவான தரவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments