ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.9,000 கோடியாக உயர்வு- அமைச்சர் ராஜ்நாத்சிங்
கடந்த 5 ஆண்டுகளில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 9 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள் மூலம் 4ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்ததுடன், 4 லட்சத்து 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நம் நாட்டுப் பொருளாதாரத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற உள்ளதாகத் தெரிவித்த ராஜ்நாத் சிங், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் நாடு தற்சார்புடன் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
Comments