நான் சொல்வதையே முதலமைச்சர் செய்து வருகிறார் - மு.க.ஸ்டாலின்

0 2746

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட திமுகவின் அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் ஊராட்சிகள் தோறும் நூலகம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நட்டாத்தியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஸ்டாலினுக்கு வேலும்,சேவல்கொடியும் வழங்கப்பட்டன.

 பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஸ்டாலின், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுப் பேசினார். திமுக என்ன சொன்னதோ, தாம் என்ன கூறுகிறேனோ, அதையே அப்படியே முதலமைச்சர் பழனிசாமி செய்து வருவதாக சாடினார். நீதிமன்றம் சொன்னபோது விவசாய கடனை ரத்து செய்யாத தமிழக அரசு, இப்போது தேர்தல் சுயநலனுக்காக ரத்து செய்துள்ளதாக விமர்சித்தார்.

 உண்மையான மக்கள் ஆட்சி 3 மாதங்களில் மலர போவதாக பேசிய ஸ்டாலின், 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.

கலைமாமணி விருது பெற்ற முத்துலட்சுமி, தவில் வித்துவான் சுப்பையா உள்ளிட்டோருக்கு பொன்னாடை போர்த்தி, மரியாதை செய்தார். அப்போது பேசிய அவர், தமது வாழ்க்கை தியாகங்களால் உருவானது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments