சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில்களை ஓட்ட இலங்கை ரயில் ஓட்டுநர்கள் சங்கம் மறுப்பு

0 13061

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில்களை இயக்குவதை புறக்கணிக்க இலங்கை ரெயில் ஓட்டுநர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் ரெயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளர் இந்திகா தொடங்கொட, சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் வண்டிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக  உள்ளன என்றார். 

சீன ரெயில் பெட்டிகளில் பிரேக்குகள் சரி இல்லை என்று அவர், சமீபகாலங்களில் 200 விபத்துகள் நேரிட்டுள்ளன என்றார்.

சீனாவில் தயாரிக்கப்படும் ரெயில் வண்டிகளில் குறைபாடுகள் தீர்க்கப்படும் வரை என்ஜின் டிரைவர்கள் அந்த ரெயில் வண்டிகளை இயக்குவதை புறக்கணிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments