தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பெற்ற 21.39 லட்சம் பேரின் அட்டைகள் விரைவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் - சத்தியப்பிரத சாகு

0 1821

தமிழகத்தில் முதன்முறையாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 21 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் விரைவு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவோருக்கு வாக்காளர் அட்டைகளை அஞ்சல் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க அஞ்சல் துறையுடன் தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு உடன்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments