ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை, வரதட்சணை குற்றங்களுக்கு 10 ஆண்டு வரை சிறை என இரண்டு முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேறின
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை, வரதட்சணை மரணங்களுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை ஆகிய 2 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
தடையை மீறிச் சூதாடுவோருக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம், 6 மாத சிறை தண்டனை, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம், 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல, வரதட்சணை மரண வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனை அதிகரித்து இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
Comments