புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்: வரலாற்றில் முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை 51 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி நிறைவு
வரலாற்றில் முதன்முறையாக 51 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிய மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வணிகநேர முடிவில் ஐம்பதாயிரத்து 732 புள்ளியில் நிறைவடைந்தது.
மூன்றாம் காலாண்டு இலாபநட்ட அறிக்கைகயைப் பல நிறுவனங்கள் வெளியிட்டதால் பங்குச்சந்தைகளில் இன்று காலையில் வணிகம் ஏற்றமடைந்தது. பகல் பத்து மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 401 புள்ளிகள் உயர்ந்து வரலாற்றில் முதன்முறையாக 51 ஆயிரத்து 15 என்கிற வரம்பைத் தொட்டது.
வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 117 புள்ளிகள் உயர்ந்து ஐம்பதாயிரத்து 732ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 14ஆயிரத்து 924 ஆக இருந்தது. அதிகப்பட்சமாக பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 11 விழுக்காடு உயர்ந்தது.
Comments