திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனால் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரி, சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் திருக்கொளஞ்சியப்பன் அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி ஆகியன வருகின்றன.
Comments