நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதை உலகமே அறியும், ரத்தத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வது காங்கிரசுக்குத்தான் தெரியும் - அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதை உலகமே அறியும், ஆனால் ரத்தத்தை பயன்படுத்தி எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்பது காங்கிரசுக்குத்தான் தெரியும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் சாடியுள்ளார்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள், தூண்டிவிடப்பட்டு ஒரேயொரு மாநிலம் என்ற குறுகிய வரம்புக்குள் நடைபெறுபவை என்றார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களால் ஒரேயொரு குறையைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை என்றும் நரேந்திர சிங் தோமர் கூறினார். இந்த விஷயத்தில் தாங்கள் கவுரவம் பார்க்கவில்லை என்றும், சட்டத்தில் என்ன குறை என்று கூற ஒருவர் கூட முன்வரவில்லை என்றும் வேளாண்துறை அமைச்சர் தெரிவித்தார்.
Comments