கிரேட்டா தன்பர்க்குக்கு எதிராகத் தேசத் துரோக வழக்குப் பதியவில்லை - டெல்லிக் காவல்துறை விளக்கம்

0 2748

கிரேட்டா தன்பர்க்குக்கு எதிராகத் தேசத் துரோக வழக்குப் பதியவில்லை என டெல்லிக் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்ட சுவீடன் நாட்டைச் சேர்ந்த காலநிலைச் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க்குக்கு எதிராகத் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இது குறித்துக் காவல் ஆணையர் பிரவீர் ரஞ்சனிடம் செய்தியாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அவர், இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியைப் பரப்பியதற்காகத் தான் வழக்குப் பதியப்பட்டதாகத் தெரிவித்தார்.

தேசத்துரோகம், நல்லிணக்கத்தைக் குலைத்தல், குற்றச்சதி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் சமூக ஊடகப் பதிவை உருவாக்கியவருக்கு எதிராகத் தான் வழக்குப் பதிந்ததாகவும், எவருடைய பெயரும் வழக்கில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments