கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,114.9 கோடி வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆயிரத்து 115 கோடி ரூபாய் வங்கிகள் மூலமாக செலுத்தப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 24 மணி நேரமும் கனமழை, வெள்ள பாதிப்புக்கான கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டதாகவும் அந்த மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வகையில் இழப்பீடு சென்று சேர்கிறதா என்பதையும் முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் கூறினார்.
Comments