நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்தைப் ரூபாய் நோட்டில் அச்சிடும் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

0 9731
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்தை ரூபாய் நோட்டுக்களில் அச்சிடும் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்தை ரூபாய் நோட்டுக்களில் அச்சிடும் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுக்களில் அச்சிட்டு அவரைச் சிறப்பிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments