வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை - இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்

0 1557
வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை - இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்

ங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமுமின்றி 4 விழுக்காடாகத் தொடரும் என அறிவித்தார்.

அதேபோல் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்துள்ள வைப்புத் தொகைக்கு வழங்கும் வட்டி விகிதமும் எந்த மாற்றமுமின்றி 3 புள்ளி மூன்று ஐந்து விழுக்காடாகத் தொடரும் எனத் தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீட்சியடைந்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வதால் அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பத்தரை விழுக்காடாக இருக்கும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments