சிலி கடலில் மர்மமான முறையில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி
சிலி நாட்டின் மத்திய கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் மர்ம மான முறையில் இறந்து கரை ஒதுங்கி உள்ளது.
அங்குள்ள Bio Bio கடல் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடல் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
மீன்கள் மட்டுமல்லாது நண்டுகள் உள்ளிட கடல் வாழ் உயிரினங்களும் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments