முதலமைச்சர் பினராயி ஆட்சியில் இருக்கும் தகுதியை இழந்து விட்டதாக ஜே.பி.நட்டா விமர்சனம்

0 1326
முதலமைச்சர் பினராயி ஆட்சியில் இருக்கும் தகுதியை இழந்து விட்டதாக ஜே.பி.நட்டா விமர்சனம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆட்சியில் இருக்கும் தார்மீக தகுதியை இழந்துவிட்டதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சாடியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கேரளத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக தலைவர் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினர் இருதரப்பினரையும் கடுமையாக விமர்சித்தார்.

திருவனந்தபுரத்தில் புதன்கிழமையன்று முதல் நாளில் பத்மனாபசுவாமி கோவிலை அவர் தரிசித்தார். பின்னர் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இரண்டாவது நாளில் திரிச்சூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments