கிருஷ்ணா நதி நீர் மூலம் இதுவரை 7டிஎம்சி நீர் கிடைத்துள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது- பொதுப்பணித்துறை

0 1570
கிருஷ்ணா நதி நீர் மூலம் இதுவரை 7டிஎம்சி நீர் கிடைத்துள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது- பொதுப்பணித்துறை

கிருஷ்ணா நதி நீர் மூலமாக இதுவரை 7 டிஎம்சி நீர் கிடைத்துள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. தற்போது வரை 7 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

மேலும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதன் காரணமாக சென்னைக்கு இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments