மனித வெடிகுண்டாக மாற 100 பேர் தயார்: அமமுக பிரமுகர் சவால்..! அதிமுக கொடியுடன் அலப்பறை

0 13870
மனித வெடிகுண்டாக மாற 100 பேர் தயார்: அமமுக பிரமுகர் சவால்..! அதிமுக கொடியுடன் அலப்பறை

பெங்களூரில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்து வரும் ரிசார்ட் வாசலில் குனிந்து நிமிந்து தொட்டுக்கும்பிட்டு காத்துக்கிடந்த அமமுக தொண்டர்கள் சிலர், மீடியாக்களின் கவனத்தை ஈர்க்க, அதிமுக கொடியுடன் மனித வெடிகுண்டாக மாறபோவதாக கூறி திகிலூட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கோல்ப் ஷேய்ர் என்ற இந்த பிரமாண்ட சொகுசு விடுதியில் தான் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

அவரை பார்ப்பதற்காக அங்கு வந்து சென்ற கிருஷ்ணகிரி மாவட்ட அமமுகவை சேர்ந்த சிலர், சசிகலா மீது விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்ள ரிசார்ட் வாசலை தொட்டு கும்பிட்டு வணங்கினர்..!

அமமுக தொண்டர்களின் செயல் வேடிக்கையாக இருந்ததால் கர்நாடக சேனல் செய்தியாளர்கள் அவர்களை குனிந்து நிமிர வைத்து பல்வேறு கோணங்களில் படம் பிடித்தனர்

காலையில் வெறுங்கையை வீசிக் கொண்டு வந்தவர்கள் மாலை வரை அங்கேயே சுற்றிய நிலையில் இரவு நெருங்கியதும் கையில் அதிமுக கொடியுடன் சசிகலாவை வாழ்த்தி கோஷமிட்டப்படி புது அவதாரம் எடுத்தனர்.

கர்நாடக கேமரா மேன்கள் சொல்லுவதற்கு ஏற்ப நின்று.. திரும்பி.. கொடி பிடித்து.. கோஷமிட்டபடி அமமுக தொண்டர்கள் செய்த அலப்பறைகள் கலகலப்பூட்டின.

சவால் விடும் வகையில் தாங்கள் கையில் அதிமுக கொடியை ஏந்தி வந்திருப்பதாகவும், சசிகலாவுக்காக 100 பேர் மனித வெடிகுண்டாக மாற தயாராக இருப்பதாகவும் கூறி திகிலூட்டினர்...

ஒரு கட்டத்தில் அமமுக தொண்டர்கள் அனைவரும் அதிமுக கொடியுடன் அங்கு வர வேண்டும் என்றும், தாங்கள் கட்டும் அதிமுக பார்டர் போட்ட வேட்டியை கழட்டி பார்க்கட்டும் என்றும் சவால் விடுத்து கலகலப்பூட்டினர்

கோஷமிட்ட குழுவினரின் பின்னணியில் வந்த இருவர் தென்னிந்திய சசிகலா பேரவை என்ற பேனரையும் கையில் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எந்த அமைப்பில் இருக்கிறோம்.. எந்த கொடியை பிடிக்கிறோம் என்ற நோக்கமோ உறுதியோ இல்லாமல் அவர்கள் செய்த அலப்பறைகளை கண்டு கர்நாடக செய்தியாளர்கள் சிரித்தனர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments