இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைந்துள்ள போதிலும் , 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் விகிதம் அதிகரிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம் கவலை
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ள போதிலும், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பது கவலை அளிப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை, தேசிய அளவில் வாராந்திர சராசரியாக 1.82 சதவீதமாக உள்ளது. ஆனால் கேரளாவில் இந்த விகிதம் 11.20 சதவீதமாகவும், சட்டிஷ்கரில் 6.20 சதவீதமாகவும் இருக்கிறது.
அதே போன்று மகாராஷ்டிரா, கோவா, நாகாலாந்து, லடாக், புதுச்சேரி, சண்டிகரிலும் விகிதாசாரம் உயர்த்திருப்பது கொரோனா பரவல் கட்டுக்குள் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
Comments