மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க சென்ற தந்தை விபத்தில் பலி... திருவாரூரில் நேர்ந்த சோகம்

0 6197

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்கச் சென்ற மணமகனின் தந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

ராஜகொத்தமங்கலத்தை சேர்ந்த பன்னீர் என்பவர், தனது மகனின் திருமணப் பத்திரிக்கையை மன்னார்குடியில் உள்ள உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு, உறவினர் விக்னேசுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

ராணிதோப்பு என்ற இடத்தில் இவர்களது வாகனம் மீது,எதிரே அதிவேகமாக வந்த கார் மோதி, சாலையின் ஓரத்தில் இருந்த லாரி மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பன்னீர் மற்றும் விக்னேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments