சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டண விபரங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு
சிதம்பரம் அரசு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், MBBS படிப்புக்கு ஆண்டுக்கு.13 ஆயிரத்து 610 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும், BDS படிப்புக்கு ஆண்டுக்கு 11 ஆயிரத்து ,610 ரூபாயும், MD, MS, MDS படிப்புகளுக்கு ஆண்டுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கூடுதல் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு, எஞ்சிய பணம் திருப்பிதரப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Comments