கிரேட்டா தன்பர்க் மீது டெல்லி போலீசார் FIR பதிவு செய்தது

0 3018

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டர் பதிவுகளை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலரும், சுவீடனை சேர்ந்த பதின்ம வயது பெண்ணுமான கிரேட்டா தன்பர்க்கின் மீது டெல்லி போலீசார் FIR பதிவு செய்துள்ளனர். 

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உதவ நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்று தவறான தகவல்களுடன் கூடிய ஒரு ஆவணத்தை தன்பர்க் ஷேர் செய்திருந்தார். பிறகு அதனை சிலர் தவறு என சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அவர் நீக்கிவிட்டார். ஆனாலும் அந்த தவறான ஆவணம் அதற்குள் வேகமாக பரவிவிட்டது.

இந்த நிலையில், போராட்டத்தை தூண்டும் வகையில் தவறான தகவல்களை பகிர்ந்ததால், கிரிமினல் சதி, சமூகங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் தர்ன்பெர்க் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments