1000 மாணவர்கள் வடிவமைத்த 100 சிறிய செயற்கைகோள்கள்
ராமேஸ்வரத்தில் அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட 100 சிறிய செயற்கைகோள்கள் வரும் 7ம் தேதி பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பெயரிலான இந்த செயற்கைக்கோள்களை 7 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் ஆறு நாள் இணையவழி பயிற்சியைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். இவை 40 கிராம் முதல் 50 கிராம் எடை கொண்டவை. இந்த செயற்கைக்கோள்கள், ஹைட்ரஜன்நிரப்பப்பட்ட பெரிய பலூனுக்குள் வைக்கப்பட்டு, வானில் பறக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
வானிலை, விவசாயம், வெப்பமயமாதல், உள்ளிட்ட தகவல்களை நேரடியாக மாணவர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments