போலி கணக்கு மூலம் பெண் போல் நடித்து ஆபாச படங்களை அனுப்பி பெண்களை ஏமாற்றிய இன்ஸ்டா இடியட் கைது

0 7192
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், இன்ஸ்டாகிராமில் பெண் போல் நடித்து சகஜமாக பழகி 70-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டான்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், இன்ஸ்டாகிராமில் பெண் போல் நடித்து சகஜமாக பழகி 70-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டான்.

சுமன் என்ற அந்த இளைஞன், பெண்களின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, பல பெண்களோடு நட்பாக பழகி, அவர்களின் தனிப்பட்ட விபரங்களை தெரிந்து கொண்டதோடு, புகைப்படத்தையும் வாங்கிக் வைத்துக் கொண்டு சில்மிஷ வேலையில் ஈடுபட்டுள்ளான்.

தன்னுடைய ஆபாச படத்தை அவர்களுக்கு அனுப்பி தொந்தரவு செய்ததோடு, இச்சைக்கு இணங்கவில்லை என்றால் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளான். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவே, அவனை கைது செய்து ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments