இந்தோ-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்காவின் சூப்பர் விமானந்தாங்கி போர் கப்பல்... சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க அமெரிக்கா போர் தந்திர நடவடிக்கை
அமெரிக்காவின் சூப்பர் விமானந்தாங்கி போர் கப்பலான நிமிட்ஸ், மத்திய கிழக்கு கடற்பகுதியில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக தெற்கு சீன கடல் அடங்கிய இந்தோ-பசிபிக் கடற்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து தைவான் போன்ற நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தெற்கு சீன கடல், வழியாக நட்பு நாடுகளின் போக்குவரத்து தடையின்றி நடக்கவும் அமெரிக்காவின் இந்த போர் தந்திர நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சீனா மீது முன்னாள் அதிபர் டிரம்ப் கையாண்ட கடினமான அணுகுமுறையையே புதிய அதிபரான ஜோ பைடனும் தொடர்ந்து எடுப்பார் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கு நிமிட்ஸ் போர்க்கப்பலின் நகர்வு ஆதாரமாக உள்ளது என கூறப்படுகிறது.
Comments