விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரங்கள் வெற்றி பெறாது - அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் அவதூறு பிரச்சாரங்கள் வெற்றி பெறாது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு பாடகி ரிஹானா, சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் ஆகியோர் அளித்த ஆதரவுக்கு வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த கருத்தை டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
அவதூறு பிரச்சாரங்களை இந்திய மக்கள் தூக்கி எறிவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் நம்பிக்கை இந்திய அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments