கொரோனா தடுப்பூசி வாங்க இந்திய சீரம் நிறுவனத்துடன் யுனிசெஃப் ஒப்பந்தம்
இந்திய சீரம் நிறுவனத்திடம் இருந்து 1 கோடியே 10 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்க யுனிசெஃப் அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.
அஸ்ட்ரஜென்கா மற்றும் நோவாவாக்ஸ் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளை 100க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு வழங்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தலைவர் Henrietta Fore தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்தை இந்திய மதிப்புக்கு சுமார் 219 ரூபாய்க்கு விற்பனை செய்ய யுனிசெஃப் திட்டமிட்டுள்ளது.
Comments