இந்தியாவின் வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு
புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த சட்டங்களால் இந்திய சந்தைகளில் வர்த்தகம் அதிகரிப்பதுடன், வேளாண் துறையில் கூடுதல் தனியார் முதலீடுகளை ஈர்க்கவும் முடியும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாஷிங்டனில் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், அமைதியான போராட்டங்கள் என்பது வெற்றிகரமான ஜனநாயக நாடுகளின் அடையாளம் மட்டுமே என கூறினார்.
வேளாண் சட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளை அரசும், விவசாயிகளும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார். இதே கருத்தை இந்தியாவின் உச்ச நீதிமன்றமும் வெளியிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
Comments